ஜுன் 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 20 கிலோ இலவச அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஸ்வரண் சிங் நேற்று (மே 17) வெளியிட்டார்.
முன்னதாக, இந்த உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் (மே 16) கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்தின்படி, அரிசி பெறத் தகுதியுடைய அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 12 முதல் 20 கிலோ வரை வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ரேஷன் கடைகளின் அறிவிப்புப் பலகைகளிலும் எழுதி வைக்க வேண்டும் என்றும் ஸ்வரண் சிங் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஜுன் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வரும் ரேஷன் அட்டைகளுக்கும் 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment