Friday, May 20, 2011

புதிய தலைமை செயலாளர், முதல்வரின் செயலர்கள் அறிவிப்பு


தமிழக அரசின் தலைமை செயலாளராக எஸ்.மாலதி பணியாற்றி வந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றதும் அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாலதி தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக தேபேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார்.

அவர் இதுவரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிட்கோ) தலைவராக இருந்தார். அரசு உத்தரவுப்படி இன்று உடனடியாக அவர் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவிஏற்றார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது  . இதன்படி, ஷீலா பிரியா, ராம் மனோகர் ராவ், வெங்கட்ராமன், ராமலிங்கம்  மற்றும் ரீடா ஹாரிஸ் தக்கார் ஆகியோர் முதல்வரின் செயலாளர்களாக பணியாற்றுவர்கள்.

No comments:

Post a Comment